அட்டாளைச்சேனையில் மாணவர்களுக்கு உதவியும், கௌரவிப்பு நிகழ்வும்

🕔 May 15, 2023

ட்டாளைச்சேனை மாற்றத்துக்கான முன்னணியினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், கோணாவத்தை கிராமத்தில் நீண்டகாலமாக கிராம சேவகராக இருந்து பிறிதொரு கிராம சேவகர் பிரிவுக்கு இடமாற்றலாகி சென்ற எம்.ஐ.அஸ்வர் , அந்நூர் மகா வித்தியாலயத்தில் கற்று – கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு 04 வருட உயர் கல்வியை முடித்து சட்ட இளமானியாக வெளியேறிய சுமையா ஹிபாஸ் ஆகியோருக்கான கௌரவிப்பும் நேற்று (14) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

முன்னணியின் செயலாளரும், ஊடகவியலாளருமான றிசாத் ஏ காதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் – ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பிரதம அதிதியாக எம்ஜேஎஸ். குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.ஐ.எம். ஜரீன் கலந்து கொண்டார்.

கிராம உத்தியோகத்தர் எம். அஸ்லம் சஜா, மாற்றத்துக்கான முண்ணனியின் உப தலைவர்களான கே. அப்துல் ஹமீட் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்