இம்ரான் கானை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு: அதிகரிக்கிறது வன்முறை

🕔 May 10, 2023

ழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 08 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று துணை ராணுவப்படையினரால் சுற்றுவளைப்பட்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டதால், அவரின் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த எதிர்ப்பாளர்கள் புதன்கிழமை வடமேற்கில் உள்ள ‘ரேடியோ பாகிஸ்தான்’ கட்டடத்துக்கு தீ வைத்ததுடன், ராணுவ உயரதிகாரி ஒருவரின் வீட்டையும் எரித்துள்ளனர்.

மேலும் பல வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டு – தீ வைக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அதிகாரத்தை இழந்த இம்ரான் கான், நாட்டின் மிகவும் பிரபலமான எதிர்க்கட்சி நபராக இருக்கிறார். பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஏழாவது முன்னாள் பிரதமர் இவராவார்.

அவரை அதிரடியாக கைது செய்தமையானது, அரசியல் கொந்தளிப்பை மிகவும் அதிகமாக்கியுள்ளது.

இந்த நிலையில், வன்முறை சம்பங்கள் தொடர்பில் குறைந்தது 1000 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இம்ரான் கான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்லாமாபாத்தில் உள்ள வளாகத்துக்குச் செல்லும் வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்