இலங்கை ரக்பி தலைமையகத்துக்கு ‘சீல்’ வைப்பு

🕔 April 14, 2023

லங்கை ரக்பி தலைமையகம் – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுச் சட்டத்தின் சில விதிகளுக்கு இணங்க ரக்பி யை கலைத்தார்.

அதன் பின்னர் நேற்று முன்தினம் (12) ஒரு நிலைக்குழுவை நியமிக்கப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இலங்கை ரக்பி அதிகாரிகள் – தங்களுக்குத் தெரியாமல் தலைமையகத்துக்கு அமைச்சு சீல் வைத்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர், மேலும் கட்டிடத்தின் சாவியும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகளால் எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கின்றனர்.

டொரிங்டனில் உள்ள இலங்கை ரக்பி தலைமையகவே இவ்வாறு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்