நாடாளுமன்றுக்கு ஏ.எச்.எம். பௌஸி: வர்த்தமானி அறிவிவித்தல் வெளியானது

🕔 January 25, 2023

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து – வெற்றிடமாகியுள்ள இடத்துக்கு பெளஸி இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில், மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அவருக்கு அடுத்ததாக கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஏ.எச்.எம். பௌஸி, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக நியகிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்