முஜிபுர் ரஹ்மானின் ராஜிநாமா தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிப்பு

🕔 January 20, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து முஜிபுர் ரஹூமான் ராஜினாமா செய்துள்ளமையை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் முஜிபுர் ரஹூமான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

முஜிபுர் ரஹ்மானின் கடிதத்துக்கு அமைய – பதவி விலகல் 2023 ஜனவரி 20 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64 (1) பிரிவின் பிரகாரம், நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இது பற்றி அறிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரச சபைக்கான தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிடும் பொருட்டு, முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஏ.எச்.எம். பௌசி நியமிக்கப்படவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்