ஈஸ்டர் தாக்குதல் மே, ஜுலை போராட்டங்களின் போது பாதுகாப்புத் தரப்பினர் செயற்பட்ட விதத்தில் சிக்கல்கள் உள்ளன: அமைச்சர் பிரசன்ன குற்றச்சாட்டு

🕔 January 19, 2023

– முனீரா அபூபக்கர் –

ஸ்டர் தாக்குதல் மற்றும் மே 9 மற்றும் ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் சம்பவங்களின் போது – பாதுகாப்புப் படையினர் செயற்பட்ட விதத்தில் சிக்கல்கள் இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் தேர்தலில் போட்டியிட முன்மொழியப்பட்ட ஒரு வேட்பாளர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தேர்தல் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்புத் தரப்பினர் கடுமையான நடவடிக்கைகள் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

ஈஸ்டர் தாக்குதலைப் போலவே மே 9 மற்றும் ஜூலை 9 தொடர் சம்பவங்களை பாதுகாப்புப் படையினர் கையாள்வது சிக்கலாக உள்ளது. இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பிரதிவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, ​​நீதிபதி அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாவை வழங்கியுள்ளார். அவர்களுக்கு ‘சஸ்ரோஜன்’ வாங்கி தரசொல்லியுள்ளார்.

இது நேற்று செய்திகளில் வந்தது. அது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது நீதித்துறையும் சீர்குலைந்துள்ளது. போராட்டத்தின் போது ​​நீதிமன்றம் அந்த போராட்டத்தை பாராட்டியது.

மேலும் இன்று மினுவாங்கொடை தேர்தல் வேட்பாளர் கொல்லப்பட்டதுடன் அவரது வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மௌபிம நாளிதழ் தெரிவித்துள்ளது. அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர். சட்டம் – ஒழுங்குக்கு ஏற்படும் அச்சுறுத்தலை பாதுகாப்புப் படையினர் இன்னும் கடுமையாகக் கையாள வேண்டும். அல்லது தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடரலாம்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (ஸ்ரீ.பொ.பெ. சுயேச்சை)

மாண்புமிகு அமைச்சரே நான் இதற்கு முன்னரும் இந்தச் சபையில் இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளேன். முன்னாள் பாதுகாப்புத் தலைவர்கள் உட்பட ஐந்து பேர் கொண்ட குழு அல்லது ஆணைக்குழுவை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய ஜனாதிபதியிடம் அந்த அறிக்கை இருக்க வேண்டும். அந்த அறிக்கை ஏன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை? காரணம் என்ன?

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர்  பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ.பெ)

கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, கடந்த அமைச்சரவையில் இது தொடர்பில் கோரிக்கை விடுத்தோம். அதை சமர்ப்பிக்கும்படி. அதனை ஆராய்ந்து அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்திலும் சமர்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்