உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்புமனு கோரும் திகதி வரும் 05ஆம் திகதி அறிவிக்கப்படும்

🕔 December 26, 2022

ள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அடுத்த வருடம் (2023) ஜனவரி 05 ஆம் திகதிக்கு முன்னர் கோரப்ப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதியில் வேட்புமனுக்கள் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு முன்னர் தெரிவித்திருந்தது. இருப்பினும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் வேட்புமனுக்களை கோருவதற்கான திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்படும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சியின் செயலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்ற கட்சிகளின் எண்ணிக்கை சுமார் 86 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சில கட்சிகளின் உயர் பதவிகள் தொடர்பாக சட்ட சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் திகதி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பஞ்சிஹேவா ஒத்தி வைத்தமையினால், அரசியல் கட்சித் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்