உள்ளூராட்சி தேர்தலை நடத்தத் தயாராகுமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணைக்குழு அறிவுறுத்தல்

🕔 December 24, 2022

ள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு நேற்று அறிவுறுத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கான தேவைகளை மதிப்பிடுமாறும், வாகனங்கள் மற்றும் பொது ஊழியர்களைக் கணக்கிடுமாறும், மாவட்ட ரீதியாக நியமிக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் ஆணையர்களை, தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுள்ளது.

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

தேர்தல் மூலம் 8000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

அடுத்த வருடம் மார்ச் 20ஆம் திகதிக்குள் புதிய உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட வேண்டும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு மற்றும் வேட்புமனுக்களை கையளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றது.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் 04 வருங்களாகும். ஆயினும், அதன் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு அரசாங்கம் நீடித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்