தலைப்புச் செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு: அமைச்சரவை அங்கிகாரம்

பொலிஸ் உத்தியோகர்தர்கள் 9,417 பேரை பதவி உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த இந்த யோசனைக்கு, இன்று (19) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரமுயர்த்தப்படவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களில் 8,312  ஆண்களும், 1,005  பெண்களும் உள்ளடங்குவர். கொன்ஸ்டபிள் தொடக்கம் பொலிஸ் பரிசோதகர் தரம் வரையிலானவர்கள் அவர்களின் அடுத்த தரத்துக்கு பதவி உயர்த்தப்படவுள்ளனர்.

இவர்களுக்கான பதவியுயர்வு பல காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.