போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள், அட்டாளைச்சேனையில் வெற்றிகரமாக நடைபெற்றன

🕔 December 17, 2022

– அஹமட்-

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனியும் அறபா வித்தியாலய மாணவர்களுக்கான கருத்தரங்கும் இன்று (17) அட்டாளைச்சேனையில் பெருவாரியானோரின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

‘நாம் ஊடகர் பேரவை’யின் (we Journalists forum) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளுக்கு அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் வைஎம்எம்ஏ அமைப்பின் அட்டாளைச்சேனை கிளையினர் அனுசரணை வழங்கினர்.

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பமான போதைப் பொருளுக்கு எதிரான நடைபவனி, சந்தைச் சதுக்கத்தைச் சென்றடைந்து, மீண்டும் அறபா வித்தியாலயத்தை வந்தடைந்தது.

அதனையடுத்து அறபா வித்தியாலயத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட் வளவாளராக பங்கேற்றார்.

‘நாம் ஊடகர் பேரவை’யின் (we Journalists forum) தலைவர் யூ.எல். மப்றூக் தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸ், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். ஜுனைதீன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

மேலும், வைஎம்எம்ஏ அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.ஐ.எம். றியாஸ், அகில இலங்கை வைஎம்எம்ஏ பேரவையின் உப தலைவர் எஸ். தஸ்தகீர், செயற்திட்ட தவிசாளர் கே.எல். சுபையிர், அந்த அமைப்பின் அட்டாளைச்சேனை கிளையின் தலைவர் எம்.ஐ. ஹாசிம், செயலாளர் ஏ.எல். கியாஸ்தீன், அறபா வித்தியாலய அதிபர் எம்.ஏ. அன்சார், நாம் ஊடகர் பேரவையின் செயலளர் ஏ.சி. றிசாட், பொருளாளர் ஏ. புஹாது, உப தலைவர் ஏ.பி. அப்துல் கபூர், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.ஏ. வாஹிட், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்