கிழக்கு மாகாணத்துக்கு தேவையான உர விநியோகம் தொடர்பில், விவசாய அமைச்சு அறிவித்தல்

🕔 November 5, 2022

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்குத் தேவையான யூரியா உரத்தை, ஒரே தடவையில் முழுமையாக அனுப்பவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள, 566 கமநல சேவைகள் திணைக்களங்களுக்கு, தேவையான உரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களுக்கு அவசியமான யூரியா உரத்துடன், MOP எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு உரத்தையும், ஒரே தடவையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மட்டக்களப்பில் உள்ள இலங்கை உரக் களஞ்சியத்திலிருந்து, யூரியா உர விநியோகம் இன்று இடம்பெறும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்