இரட்டைக் குடியுரிமையுள்ள எம்.பிகள் தொடர்பான முடிவுகளை, நீதிமன்றம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு

🕔 October 24, 2022

ரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான முடிவுகளை நீதிமன்ற தீர்மானங்கள் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பில் புதிதாக நிறைவேற்றப்பட்ட 22வது திருத்தத்தின் கீழ், இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரட்டை குடியுரிமையை வைத்திருக்கிறாரா இல்லையா என்பது குறித்து உடனடி முடிவை எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஆணைக்குழு, அத்தகைய நபர்களை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்பான செய்தி: பதவி பறிபோகவுள்ள 10 எம்.பிகள்: 22ஆவது திருத்தத்தினால் வந்த வினை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்