பதவி பறிபோகவுள்ள 10 எம்.பிகள்: 22ஆவது திருத்தத்தினால் வந்த வினை

🕔 October 23, 2022

ரசியலமைப்குக்கான 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் காரணமாக, இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரின் பதவிகள் பறிபோகவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43வது படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனவே அவர்களை கௌரவமான முறையில் பதவி விலகுமாறு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அரசில் உயர் மட்டப்பதவிகளை வகித்து வரும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் இந்த தீர்மானத்தை எடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் – அவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தமையும் நினைவு கொள்ளத்தக்கது.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக முடியாதவாறு 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதை அடுத்து, கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2017ஆம் ஆண்டு பறிபோனமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்