22ஆவது சட்ட மூலம் தொடர்பான உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் கிடைத்துள்ளது: பிரதி சபாநாயகர் அறிவிப்பு

🕔 August 29, 2022

ரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த 09 மனுக்கள் தொடர்பான உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்றைய (29) நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் அவர் இந்த விடயத்தை கூறினார்.

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 09 மனுக்கள் மீதான பரிசீலனை அண்மையில் நிறைவடைந்திருந்தது.  

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி, சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட 09 பேர், குறித்த மனுக்களை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்