சதொச கடைகளில் 650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காலாவதியான பொருட்கள் கண்டுபிடிப்பு

🕔 August 28, 2022

தொச நிறுவன கடைகளில் 650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காலாவதியான பாவனைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சதொச நிறுவன தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன நடத்திய விசாரணையில் இவ்விடயம் வெளியாகியுள்ளது.

பால்மா, கோதுமை மா, பிஸ்கட், சோயா மீற் மற்றும் டின் உணவுகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பல்வேறு விநியோகஸ்தர்களிடமிருந்து 03 ஆண்டுகளாக வாங்கப்பட்ட விற்கப்படாத பொருட்கள் இவற்றில் அடங்குகின்றன.

புதிய சதொச தலைவர் நியமிக்கப்பட்டதில் இருந்து 13 மில்லியன் பெறுமதியான பொருட்களை மீளப் பெற்றுக்கொள்ள விநியோகஸ்தர்கள் இணங்கியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பொருட்கள் கடைகளில் இருப்பதாலும், காலாவதியான பிறகு விநியோகஸ்தர்கள் அவற்றைத் திரும்பப் பெறாததாலும் – பெரும்பாலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்