ஜெனீவா கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் குழுவில் அலசப்றி, விஜேதாஸ

🕔 August 28, 2022

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடருக்கு, இலங்கை அரசாங்கம் சார்பாக செல்லும் குழுவில் வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்த அமர்வு செப்டம்பர் 12 முதல் ஒக்டோபர் 07 வரை நடைபெறவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கு மேலதிகமாக, இரண்டு அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் இலங்கைக் குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர்.

அரசியலமைப்பின் 22வது திருத்தம் மற்றும் அதன் ஜனநாயக விதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் முடிவு மற்றும் லஞ்சம் – ஊழலுக்கு எதிரான புதிய சட்டங்கள் ஆகியவற்றை இதன்போது இலங்கை முன்னிலைப்படுத்தவுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து – இங்குள்ள மனித உரிமை நிலைமைகளை அவதானித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்