ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் ரஞ்சன் நாளை விடுதலையாகிறார்: அமைச்சர் ஹரின் தகவல்

🕔 August 25, 2022

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது திங்கட்கிழமை (29) விடுவிக்கப்படுவார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தானும், அமைச்சர் மனுஷ நாணயகாரவும் மற்றும் பலரும் கோரிக்கை விடுத்ததாக ட்விட்டர் பதிவில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்ததற்காக நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க வழக்மன்னிப்பு கோரியுள்ளார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தான் கூறிய கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும், கூறிய கருத்துகளை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2021 இல், நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

ஜனாதிபதியின் விசேட மன்னிப்புக்காக பல முறையீடுகள் செய்யப்பட்ட போதிலும், ரஞ்சன் ராமநாயக்க தற்போது வரை தனது சிறைத்தண்டனையை தொடர்ந்தும் அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையிலேயே, ஜனாதிபதியின் பொதுமன்னில் ரஞ்சன் விடுதலையாவதாக ஹரின் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்