தலைப்புச் செய்திகள்

நாட்டின் கடன் செலுத்துகைக்கான தரநிலை குறைப்பு

நாட்டின் கடன் மீள் செலுத்துகைக்கான தரநிலையினை ‘ஃபிட்ச் ரேட்டிங்’ சர்வதேச கணக்காய்வு நிறுவனம் மேலும் குறைத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து கடனை மீள செலுத்தும் திட்டம் வரையப்படும் வரையில், வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதை இலங்கை இடைநிறுத்தியுள்ளமையே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

இதற்கமைய, ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச கணக்காய்வு நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை CC நிலையிலிருந்து C நிலைக்கு தரம் குறைத்துள்ளது.

முன்னதாக, எஸ்.என்.பி எனப்படும் ஸ்டேன்டர்ட் என்ட் புவர்ஸ் நிறுவனமும் இலங்கையை CCC நிலையில் இருந்து CC நிலைக்கு குறைத்துள்ளது.

ஏற்கனவே வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவதை இலங்கை தற்காலிமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இது நடைமுறைக்கு வரும் போது, கடன் வழங்காமை நிலையை குறிக்கும் எஸ்.டி என்ற தரம் அறிவிக்கப்படும் எனவும், எஸ்.என்.பி எனப்படும் ஸ்டேன்டர்ட் என்ட் புவர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.