நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி: வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது

🕔 April 2, 2022

நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

01 ஏப்ரல் 2022 முதல் நாட்டில் பொது அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

அவசர காலச் சட்டம், பிடியாணையின்றி கைது செய்து காவலில் வைப்பதற்கும், சொத்துகளைக் கைப்பற்றுவதற்கும், எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்வதற்கும், சட்டங்களை இடைநிறுத்துவதற்கும், நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கும் அதிகாரிகளுக்கு உதவுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்