திட்டமிட்ட தீவிரவாதிகள் குழுவொன்றுதான் மிரிஹான பகுதியில் வன்முறையில் ஈடுபட்டது: ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு

🕔 April 1, 2022

னாதிபதியின் இல்லத்துக்கு முன்பாக மிரிஹான பகுதியில் நேற்று திட்டமிட்ட தீவிரவாதிகள் குழுவொன்று கலவரத்தை மேற்கொண்டு வன்முறையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது என, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இரும்புக் கட்டைகள், பொல்லுகள் மற்றும் தடிகளை ஏந்திய கும்பல், எதிர்ப்பாளர்களைத் தூண்டிவிட்டு மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பலர் திட்டமிட்ட தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் அரபு வசந்தம் வரவேண்டும் என்ற பிரச்சாரத்தை அவர்கள் முன்னின்று நடத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களை அநாமதேயமாகப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டைச் சீர்குலைக்கும் நோக்கில் இந்தக் கலவரம் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டோர் தெரிவித்துள்னர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்