
ஜனாதிபதியின் வீட்டுக்குச் செல்லும் நுகேகொடை – மிரிஹான வழியில் நேற்றிரவு தொடங்கி அதிகாலைவரை நடந்த மக்கள் ஆர்ப்பாட்டம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) ஒருவர் உட்பட 05 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், பொலிஸாருக்குச் சொந்தமான பஸ் ஒன்று, ஒரு பொலிஸ் ஜீப் வண்டி, 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு தண்ணீர்த்தாரை பிரயோக வாகனம் என்பனவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
சேதமடைந்த வாகனங்களில் பலவற்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது 17 பொதுமக்களும் 03 ஊடகவியலாளர்களும் காயமடைந்துள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.







