பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காகவே சர்வ கட்சி மாநாடு கூட்டப்படுகிறது: கலந்து கொள்வதில்லை என அ.இ.ம.காங்கிரஸ் தீரமானம்

🕔 March 23, 2022

ரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள சர்வ கட்சி மாநாடு இன்று (23) நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகாரசபைக் கூட்டம் நேற்று (22) Zoom ஊடாக நடைபெற்றபோது, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சர்வகட்சி மாநாட்டின் அவசியம் தொடர்பில் இந்த அரசாங்கத்துக்கு சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த போதும், இந்த அரசாங்கம் இது தொடர்பில் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

அரசாங்கம் தன்னுடைய பிரச்சினைகளை இந்த சந்தர்ப்பத்தில் மூடி மறைத்துக்கொள்வதற்காகவே, இந்த சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு முனைந்துள்ளது எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்துள்ள தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் இன்று நடைபெறவு சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்