தாஜுதீன் விவகாரம்; தகவல் வழங்க, டயலொக் நிறுவனம் இணக்கம்

கொலை என்ற அடிப்படையில் தாஜூடீனின் மரண விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், தாஜூடீனுடன் மரணத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் குறித்த தரவுகளை திரட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, டயலொக் நிறுனத்திடம், தாஜூடீனின் கைத்தொலைபேசிக்கான உள்வருகை அழைப்புக்கள் தொடர்பில் தகவல் கோரப்பட்டது.
இதன்போது, அவ்வாறு உள்வருகை அழைப்புக்கள் தொடர்பிலான தரவுகளை பராமரிப்பதில்லை என்று குறித்த நிறுவனம் அறிவித்திருந்தது.
எனினும் தற்போது அந்த தகவல்களை வழக்குவதற்கு டயலொக் நிறுவனம் முன்வந்துள்ளது.