பன்டோரா பேப்பர்ஸ்: உலகப் பிரபலங்களின் சொத்துகள் பற்றிய தகவல்கள் கசிவு; நிருபமா ராஜபக்ஷவின் விவரமும் உள்ளடக்கம்

🕔 October 4, 2021

லக பெரும் புள்ளிகள் பலரது சொத்துக்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான நிதி நிலை பற்றிய ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.

பன்டோரா பேப்பர்ஸ் (PANDORA PAPERS) எனும் தலைப்பில் குறித்த ஆவணங்கள் கசிந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 11.9 மில்லினுக்கும் அதிகமான ரகசிய ஆவணங்கள் இதன் மூலம் கசிந்துள்ளன.

90க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், கோடீஸ்வரர்கள் உட்பட தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் 35 பேரினது ஆவணங்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன், 300 அரச அதிகாரிகளின் பாரிய நிதிநிலை ரகசிய ஆவணங்களும் அவற்றில் உள்ளடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன் ஊடாக நாடுகளின் முக்கிய நபர்கள் தங்களின் நிதிநிலை தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களில் ரகசியமாகப் பேணி வருகின்றமை தெரியவந்துள்ளது.

ஜோர்தான் மன்னர் 70 மில்லியன் பவுண்ட்ஸ் மற்றும் அமெரிக்காவில் பல சொத்துக்களை ரகசியமாகப் பேணி வருகின்றமை குறித்த ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தவிர பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளயர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் 312,000 பவுண்ட்ஸ்களை மோசடி செய்திருப்பதும் இந்த  ‘PANDORA PAPERS’ ஆவணக் கசிவினூடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ரகசிய சொத்துக்கள் மொனோக்கோவில் இருப்பது இதனூடாகத் தெரியவந்துள்ளது.

அஸர்பைஜான் ஜனாதிபதி இலாம் அலியெஃப் உட்பட அவரது குடும்பத்தினர், ஐக்கிய ராச்சியத்தில் 400 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துக்களை வாங்கியுள்ளனர்.

அத்துடன், அவரது 11 வயது மகனுக்காக லண்டனில் 30 மில்லியன் டொலர் பெறுமதியான கட்டடம் ஒன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமருக்கு நெருக்கமானவர்களும் இவ்வாறு மில்லியன் கணக்கான டொலர்களை வைத்துள்ளதாக ‘PANDORA PAPERS’ ஆவணம் ஊடாகத் தெரியவந்துள்ளது.

நிருபமா ராஜபக்ஷ

இதில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவர் இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களான ராஜபக்ஷ சகோதர்களின் நெருக்கிய உறவினர் ஆவார்.

 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட நிருபமா 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் பிரதி அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

2016 ஆம் ஆண்டில் நிருபமாவின் சகோதரான பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட ஒரு ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் தொடர்பாக அவர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் மாளிகை ஒன்று கட்டுவதற்காக பொது மக்களின் நிதியை பயன்படுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளது. நிருபமாவின் கணவரான நடேசன் மற்றும் சமகால நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் தாம் தவறு செய்யவில்லை என மறுத்துள்ளனர்.

நிருபமா ராஜபக்ஷவும் அவரது கணவர் நடேசனும் சேர்ந்து லண்டன் மற்றும் சிட்னியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்து முதலீடு செய்ய, ஒரு ஷெல் நிறுவனத்தை நிர்வகித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. 

பன்டோரா பேப்பர்ஸ் முழு விவரங்களையும் பாரக்க: PANDORA PAPERS

Comments

புதிது பேஸ்புக் பக்கம்