10 மாத குழந்தைக்கு கொரோனா

🕔 October 9, 2020

த்து மாத குழந்தையொன்றுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொரளை – றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழுந்தைக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.

சுகயீனம் காணரமாக குறித்த குழந்தை கடந்த 07 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதியாகிள்ளது.

இதற்கிடையில், றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 05 மாத குழந்தையின் தந்தைக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த குழந்தை கடந்த இரண்டு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் நாளை மேலதிக சிகிச்சைக்காக இந்தியா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பெற்றோர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையின் போதே தந்தைக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி பகுதியை சேர்ந்த இவர்கள் குழந்தையின் சிகிச்சைக்காக கொட்டிகாவத்தை பகுதியில் தங்கியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்