பிரபாகரனின் இளைய மகன், புலிகளின் சிறுவர் படைப்பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக இருந்தார்: சரத் பொன்சேகா

🕔 October 6, 2020

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் இளைய மகன் பாலச்சந்திரன் என்பவர், புலிகள் அமைப்பினுடைய சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தார் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

பிரபாகரனின் முழுக் குடும்பமும் பயங்கரவாதிகள் எனவும் இதன்போது அவர் கூறினார்.

பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன் ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்தார்.

பாலச்சந்திரன் ராணுவத்திடம் கிடைத்திருந்தால், காற்சட்டை மற்றும் சட்டை அணிவித்து ஒழுங்குப்படுத்தப்பட்டிருப்பார் எனவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கஜேந்திரன் கூற்றுக்கு சரத் பொன்சேகா மாத்திரமல்லாது எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன் இறுதிக்கட்டப் போரின் போது பொதுமக்களுடன் இணைந்து இராணுவத்திடம் சரணடைந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

ராணுவத்தின் பாதுகாப்பில் பாலச்சந்திரன் இருந்ததாகவும் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டும் வகையிலான புகைப்படங்கள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்