தலைப்புச் செய்திகள்

ஹிட்லரின் தொப்பியை ஏலத்தில் எடுத்த அப்துல்லா: இஸ்ரேல் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கினார்

சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் லெபனான் வணிகர் ஒருவர், ஹிட்லரின் தொப்பி உள்ளிட்ட பத்து பொருட்களை ஜெர்மனியில் நடந்த சர்ச்சைக்குரிய ஏலத்தில் எடுத்துள்ளார்.

நாஜி ஆதரவாளர்கள் கரங்களில் இந்தப் பொருட்கள் சிக்கிவிடக் கூடாது என்ற காரணத்துக்காக, இதனை ஏலத்தில் எடுத்ததாகக் கூறும் அப்துல்லா என்ற இந்த வணிகர், இதனை இஸ்ரேலுக்காக நிதி திரட்டும் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் 300 பணக்காரர்களில் ஒருவரான அவர், ஐரோப்பாவில் யூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறார்.

அவர் ஏலம் எடுத்த பத்து பொருட்களில் ஹிட்லர் பயன்படுத்திய தட்டச்சு இயந்திரம், சிகரெட் பெட்டி மற்றும் ஹிட்லரின் சுயசரிதையான மெயின் கேம்ப் உள்ளிட்டவையும் அடங்கும். அப்துல்லாவின் இந்த செயலை யூதக் குழுக்கள் பாராட்டியுள்ளன.