எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை

🕔 April 27, 2018

ரசாங்கத்தை விட்டும் விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தங்களுக்கு எதிர் தரப்பில் ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு, நாடாளுமன்ற செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16பேர், கடந்த 11ஆம் திகதி வாக்களித்திருந்தனர்.

இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் தலைவர் எனும் வகையில் ஜனாதிபதியின் அனுமதியுடன், மேற்படி 16 பேரில் அமைச்சுப் பதவியை வகித்தவர்கள், தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்திருந்தனர்.

இந்த நிலையிலேயே, இவர்கள் தற்போது நாடாளுமன்றில் எதிர் தரப்பில் ஆசனங்களில் அமரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments