வேடுவப் பெண், தேர்தலில் வெற்றி; இலங்கை வரலாற்றில் முதல் சாதனை

🕔 February 14, 2018

வேடுவப் பெண்ணொருவர் இலங்கையில் முதல் தடவையாக, உள்ளுராட்சி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தெஹியத்த கண்டி பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட டப்ளியு.எம். ஷிரோமாலா எனும் 37 வயதுடைய வேடுவப் பெண் ஒருவரே, இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார்.

க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றுள்ள இவர், போட்டியிட்ட வட்டாரத்தில் தேர்தலில் 1369 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

எதிர் காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலிலும் – தான் போட்டியிடவுள்ளதாக ஷிரோமாலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக இவர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்