தேர்தல் கால குற்றங்கள் தொடர்பில் கைதான 78 பேர், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தமையகம் அறிவிப்பு

🕔 December 31, 2017

ள்ளுராட்சித் தேர்தல் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 78 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சந்தேக நபர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட காலகட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் 44 பேர் தேர்தல் சட்டங்களை மீறமைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட 39 முறைப்பாடுகளுக்கு அமைவா கைது செய்யப்பட்ட மேலும் 34 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில், உள்ளுராட்சி சபைப் பிரிவுகளில் முக்கியமானவர்களும் அடங்குகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்