வைபர் ஊடாக பரீட்சை எழுதிய மாணவன் தொடர்பில் விசாரணை

🕔 December 19, 2017
.பொ.த. சாதாரணதர பரீட்சையின் கணிதப் பாட வினாத்தாளுக்கு விடையளிப்பதற்காக கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய மாணவன் தொர்பிலான விசாரணகளை பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

குறித்த மாணவனின் கையடக்கத் தொலைபேசி மற்றும் விடைத்தாள் ஆகியன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித கூறினார்.

அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள பரீட்சை நிலையமொன்றில் மாணவர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியை எடுத்து வந்து, வைபர் ஊடாக வௌியார் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தி விடைகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக நிலைய கண்காணிப்பாளருக்கு தெரிய வந்துள்ளது.

அதன்பின்னர் அந்த மாணவனின் கையடக்கத் தொலைபேசியை பெற்றுக் கொண்ட பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அநுராதபுரம் பொலிஸாரினால் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, பரீட்சைகள் திணைக்களத்தினாலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர் அந்த மாணவன் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்