உன்னை அறைந்து விடுவேன்; ஊடகவியலாளரிடம் சண்டித்தனம் காட்டிய ஞானசார தேரர்

🕔 November 20, 2017

டகவியலாளர் ஒருவருக்கு ஞானசார தேரர் அறைந்து விடுவேன் என்று கூறி, அச்சுறுத்தல் விடுத்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, குறித்த ஊடகவியலாளருக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையின் ஊடகவியலாளருக்கே, இந்த அச்சுறுத்தலை ஞானசார தேரர் விடுத்திருந்தார்.

நாரம்மலவில் பௌத்த பிக்கு ஒருவரின் தயாருடைய மரணச் சடங்கில் குறித்த ஊடகவியலாளரைக் கண்ட ஞானசார தேரர்; “நீயா சந்திர பிரேம? உனக்கு அறைந்து விடுவேன். நீ எழுதிய புத்தகம் பற்றி எமக்குத் தெரியும்” என்று கூறி, எச்சரித்துள்ளார்.

இதன்போது குறித்த ஊடகவியலாளருக்கும் தேரருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அங்கிருந்த பிக்குகள் ஊடகவியலாளரை வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.

“எனது 30 வருடக கால ஊடகத் தொழிலில், இப்படி மோசமானதொரு அச்சுறுத்தலை நான் எதிர்கொண்டதில்லை” என, அந்த ஊடகவியலாளர் அங்கு தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்