நிதி மோசடி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவருக்கு, பணிப்பாளர் நாயகம் பதவி: எழுகிறது விமர்சனம்

🕔 November 11, 2017
– அஹமட் –

ழல், மோசடிகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள பொறியியலாளர் சி. மோகனராஜா என்பவர், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், பொருளாதார அபிவிருத்திஅமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மாவடியோடை அணைக்கட்டு நிர்மாணப் பணிகளின் போது, சுமார் 70 மில்லியன் ரூபா மோசடியில் மேற்படி மோகனராஜா  ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தற்போது விசாரணைகளுக்கு உட்பட்டு வருகின்றார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளராக இவர்  பணியாற்றிய போதே, இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சரவை அனுமதியின்றியே மோகனராஜாவுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியை, நீர்ப்பாசன அமைச்சர் வழங்கியுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.
மோகராஜாவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பணிப்பாளர் நாயகம் பதவியானது, அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளை முன்னெடுப்பதில் தடங்கலாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

மோசடிக் குற்றம் சாட்டப்பட்ட அரச அதிகாரிகள் மீதான விசாரணைகளை நிறைவு செய்யாமல், அவர்களுக்கு மேலும் உயர் பதவிகளை வழங்குவது, நல்லாட்சி அரசாங்கம் மீதான அவநம்பிக்கையினை ஏற்படுத்துவதாகவே அமையும்.

மேலும், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ள பெரும் பதவிகள், அவர்கள் மீதான சுயாதீன விசாரணைகளுக்கு இடைஞ்சலாக அமையும் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதேவேளை, மட்டக்களப்பு சாந்தியார் வீதி கட்டுமானப் பணிகளிலும் மேற்படி மோகனராஜா, நிதி  மோசடிகளில்ஈடுபட்டிருந்ததாகவும் இவருக்கு எதிரான விசாரணைகள் தற்போது லஞ்ச ஊழல்ஆணைக்குழுவில் இடம்பெற்றுவருவதாகவும் அறியக்கிடைக்கின்றது.

பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அவர் வகித்த பதவியினை ராஜிநாமா செய்து விட்டே, அவர் மீதான விசாரணைகளுக்கு முகம் கொடுத்திருந்தமை போன்று, மோகனராஜாவும் நடந்து கொள்ளதல் வேண்டும் என எதிர்பாக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்