அரசியலில் இல்லாது விட்டாலும், எனது சேவை தொடரும்: வாழ்வாதார உதவிகளை வழங்கிய பின்னர், றிப்கான் பதியுதீன் தெரிவிப்பு
![](http://puthithu.com/wp-content/uploads/2017/09/Rifkan-087.jpg)
மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட கோழிக் குஞ்சுகளை, முசலி பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்கி வைத்த பின்னர் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்;
“சென்ற தடவை எனது நிதியில் மன்னாரிலுள்ள பலருக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன. இம்முறை முசலி பிரதேசத்தில் நிலவும் வறுமை மற்றும் தொழில் இன்றி கஷ்டப்படும் குடும்பங்களை கருத்திற்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் இக் கோழிக்குஞ்சுகளை முசலி பிரதேசத்துக்கு வழங்குகின்றோம்” என்றார்.
முசலி பிரதேசத்தில் வாழும் மக்களின் வறுமை நிலையினை மாற்றி அமைக்கவும் சுயதொழில் செய்து தமது குடும்பங்களைப் பராமரித்துச் செல்லும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்குடனும் இக் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன.
முசலி பிரதேச சபைக்குட்பட்ட 05 கிராமத்தில் வாழும் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு இக்கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.
நாளொன்றுக்கு குறைந்தது ஒரு குடும்பம் 1500 ரூபாய்களை வருமானம் பெறக்கூடிய சந்தர்ப்பம் இதனூடாக கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.