தகவல் அறியும் உரிமைச் சட்டம்: இன்று முதல், நடைமுறைக்கு வருகிறது

🕔 February 3, 2017

Gayantha karunathilaka - 865கவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்தும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்று அமைச்சர் கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிலிக்கையில்;

அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சியினை முன்னெடுத்து செல்கிறது. அதில் மக்களுக்கு மறைக்க வேண்டிய விடயங்கள் எதுவும் கிடையாதென்று.

இதேவேளை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு பயற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று, தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தல் உறுதிமொழி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்