சுதந்திரக் கட்சி உறுப்புரிமை இழக்கிறார் ஜி.எல். பீரஸ்

🕔 November 6, 2016

dumindaperis-0987முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழக்கிறார் என, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்.

மகிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (இலங்கை மக்கள் முன்னணி) எனும் புதிய கட்சியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபே ஸ்ரீலங்கா நிதஹஸ் பெரமுன (எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி) எனும் பெயரில் பதியப்பட்டிருந்த கட்சியொன்றின் பெயரே, மேற்கண்டவாறு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளானஎதிர்வரும் 18 ஆம் திகதியன்று, குறித்த புதிய கட்சிபற்றி அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments