உள்ளுராட்சித் தேர்தலை நடத்துமாறு ஆணையிடக் கோரி, பெப்ரல் அமைப்பு வழக்கு

🕔 September 20, 2016

PAFFREL - 098ள்ளுராட்சி தேர்தலை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆணையிடுமாறு கோரி, மீயுயர் நீதிமன்றில் பெப்ரல் அமைப்பு அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது.

அந்த வகையில், குறித்த மனுவினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஆராய்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஒன்பது, பெப்ரல் அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பெப்ரல் அமைப்பு இது குறித்து தெரிவிக்கையில்;

“மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை தொடர்ச்சியாக 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஒத்தி வைத்து வருகின்றார்.

உள்ளுராட்சி சபைகளுக்கு தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான மக்களின் இறைமையினை, இவ்வாறு தேர்தலை ஒத்தி வைப்பதன் மூலமாக, அமைச்சர் மறுக்கின்றார்” என விபரித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்