தலைப்புச் செய்திகள்

ராஜாங்கனே சத்தாரத்தன தேரர் கைது

அனுராதபுரத்தில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தின் போது முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக – ராஜங்கனே சத்தாரத்தன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுர பொலிஸ் நிலையத்திற்கு இன்று (18) அழைக்கப்பட்ட அவரிடம், குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்திய பின்னர் கைது செய்யப்பட்டார்.

அனுராதபுரம் புனித நகரிலுள்ள ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில், கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் பலர் அங்கு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ராஜங்கனே சத்தாரத்தன தேரர் தலைமையிலான குழுவினர் அங்கு வந்தடைந்தபோது பதற்றமான சூழல் உருவானது.

இரு குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் – மோதலாக மாறியதில், சத்தாரத்தன தேரரின் தலையில் காயங்கள் ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்நது பொலிஸார் தலையிட்டு, பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட பலரை கைது செய்தனர்.