
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், துறைசார் சேவைகளைப் பெறும்போது, அதன் அலுவலகங்களுக்கு அருகில் செயல்படும் அங்கீகரிக்கப்படாத தரகர்களுடன் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.
அத்தகைய இடைத்தரகர்களைப் பயன்படுத்துபவர்கள் பணத்தையும் முக்கியமான தனிப்பட்ட ஆவணங்களையும் இழக்க நேரிடும் என்று திணைக்களம் எச்சரித்துள்ளது.
ஒரு நாள் சேவைகளுக்கான முன்பதிவுகளை உத்தியோகபூர்வ இணையதளங்கள் மற்றும் தொலைபேசி சேவைகள் மூலம் மேற்கொள்ளலாம் என்று அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சாதாரண வாகன உரிமை மாற்றங்களுக்கான ஆவணங்களை, நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களததின் தலைமை அலுவலகம் மட்டுமின்றி, மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்களிலும் சமர்ப்பிக்கலாம்.
உத்தியோகபூர்வ நடைமுறைகளைப் பின்பற்றுமாறும், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடமிருந்து மட்டுமே வழிகாட்டுதலைப் பெறுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



