தலைப்புச் செய்திகள்

மகனுக்கு வைத்த குறி, தந்தை மீது பாய்ந்தது: பொரலஸ்கமுவ பகுதியில் 74 வயது நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொரலெஸ்கமு – மாலினி புலத்சிங்ஹல மாவத்தையில் அமைந்திருக்கும் வீடொன்றில், 74 வயதுடைய நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் பொலிஸார் புதிய தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளின்படி, ‘கொஸ் மல்லி’ என்று அழைக்கப்படும் ஒருவருக்காகப் பணம் வசூலிக்கும் பணியைச் செய்து வந்ததாகக் கூறப்படுபவரையே குறி வைத்திருந்தனர். ஆனால், அவரின் தந்தை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

‘தெஹிவளை சாண்டோ’ என்று அறியப்படும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவரே இச்சம்பவத்தை ஏற்பாடு செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், துப்பாக்கிதாரிகள் குறிவைத்த நபர் தப்பிய நிலையில், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் 74 வயதுடைய தந்தையை அவர்கள் தவறுதலாகச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

அடையாளம் தெரியாத அந்த இரு துப்பாக்கிதாரிகளும் மோட்டார் சைக்கிளில் வந்து, கைத்துப்பாக்கியைப் பயன்படுத்திச் சுட்டுக்விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பொரலெஸ்கமுவ பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.