தலைப்புச் செய்திகள்

முன்னாள் மனைவியின் நிர்வாணப்படத்தை வெளியிட்டவர் கைது

னது முன்னாள் மனைவியின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாகக் கூறப்படும் 36 வயதுடைய நபரொருவரை – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

படத்திலுள்ள பெண் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து, நேற்று (03) கினிகத்தேன பகுதியில் வைத்து சந்தேக நபர் கைதானார்.

சந்தேக நபரும் அப்பெண்ணும் முன்னதாகத் திருமணம் செய்திருந்ததாகவும், இச்சம்பவம் நடந்த நேரத்தில் அவர்கள் சட்டரீதியாகப் பிரிந்திருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் கண்டி உப பிரிவினர் – இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.