
நாடாளுமுன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது.
ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை 09 மணிக்கு, ஆணைக்குழு முன்னிலையில் நாமல் ஆஜரானார்.
அவரிடம் ஐந்து மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், அவர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்திற்காக அகல-உடல் கொண்ட (wide-body) விமானங்களை கொள்முதல் செய்தது தொடர்பான லஞ்சக் குற்றச்சாட்டு குறித்த விசாரணை தொடர்பாக, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.



