தலைப்புச் செய்திகள்

பார்ம் எண்ணெய் இறக்குமதிக்காக, நாடு அதிகம் செலவிடுவதாக தெரிவிப்பு

இலங்கை கடந்த ஆண்டு 38,210 மெட்ரிக் டொன் பார்ம் எண்ணெய்யினையும், 33,696 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெயையும் இறக்குமதி செய்ததாகப் பேராசிரியர் அசோகா நுகவெல தெரிவித்தார்.

‘கட்டுப்பொல்’ (Kattupol) என்று அழைக்கப்படும் முள்ளுத் தேங்காய் (Palm Oil tree) உற்பத்தி குறித்து நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர்; 2024-ஆம் ஆண்டில் 34,708 மெட்ரிக் டொன் பார்ம் எண்ணெய் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதோடு ஒப்பிடுகையில், பார்ம் எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

2025-ஆம் ஆண்டில் பார்ம் எண்ணெய் இறக்குமதிக்காக நாடு ரூ. 140,022 மில்லியனைச் செலவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

முள்ளுத் தேங்காய் உற்பத்திக்கு நாட்டில் விதிக்கப்பட்ட தடையால், சுமார் 8,000 ஹெக்டேர் புதிய தோட்டங்களின் விரிவாக்கம் தடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இலங்கை கணிசமான அளவு வருமான இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் பேராசிரியர் நுகவெல சுட்டிக்காட்டினார்.

2021-ஆம் ஆண்டில் பனை முள்ளுத் தேங்காய் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், இத்தகைய உற்பத்தியை கட்டுப்படுத்தும் உலகின் ஒரே நாடு இலங்கைதான் என்றும் அவர் கூறினார்.

சரியான முறைகளைப் பயன்படுத்திப் பயிரிட்டால், ஒரு ஹெக்டேருக்கு சுமார் நான்கு மெட்ரிக் டொன் எண்ணெய் கிடைக்கும் என்று அவர் மேலும் விளக்கினார்.

பார்ம் ண்ணெயின் உலகளாவிய சந்தை விலை தற்போது ஒரு மெட்ரிக் டொன்னுக்கு சுமார் 1,100 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.