தலைப்புச் செய்திகள்

நிலத்துக்கு அடியில் அமெரிக்கா பதுக்கி வைத்திருக்கும் 42 கோடி பெரல் எண்ணெய்

மெரிக்காவில் 42 கோடி பெரல் எண்ணைய் பூமிக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

போர் மற்றும் இயற்கை பேரழிவு போன்ற காரணத்தால் எண்ணெய் விநியோகம் தடைபடும்போது, அவசர கால தேவைகளுக்கென்று, நிலத்தடியில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு கிடங்கை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

இந்த யோசனை 1944 தோன்றினாலும் – முதல்முறையாக 1975 இல் இதனை செயற்படுத்தியது.

இங்கு சுமார் 2000 முதல் 4000 அடி ஆழத்தில் 72 கோடி பெரல் எண்ணெய்யை சேமித்து வைக்க முடியும்.

தற்போது 42 கோடி பெரல் எண்ணெய் கையிருப்பில் உள்ளது. இதனைக் கொண்டு, உலகின் 04 நாட்களுக்கும் அதிகமான எரிபொருள் தேவையை நிறைவு செய்ய முடியும்.

அமெரிக்காவுக்கு சுமார் 02 கோடி பெரல் எண்ணெய் நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது. அந்த வகையில் இந்த சேமிப்பு – ஒரு மாதத்துக்குத் தாக்குப் பிடிக்கும்.

இந்த மொத்தக் கட்டமைப்புக்கு இலங்கை மதிப்பில் 13533 கோடி ரூபாய் தேவையாக உள்ளது. மேலும் இதன் நாளாந்த பராமரிப்புச் செலவுக்கு 67 கோடி ரூபாயையும் அமெரிக்கா செலவிடுகிறது.

உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால், இதிலிருந்து அமெரிக்கா எண்ணெய்யை எடுத்துப் பயன்படுத்தியது.