
நாட்டில் இந்த ஆண்டு – மொத்தம் 44 காட்டு யானைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளதாக, வனவிலங்கு பாதுகாப்புத் தினைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, யானைகள் தாக்கி 10 மனிதர்கள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 01 முதல் பிப்ரவரி 20 வரை – இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு, சட்டவிரோத மின்சார வேலிகள் அமைத்தல், ரயில் விபத்துகள், விஷத்தை உட்கொண்டமை மற்றும் நீரில் மூழ்கியமை ஆகியவை இந்த யானைகளின் இறப்புகளுக்கான காரணங்களாகும்.
இதே காலகட்டத்தில், காட்டு யானைகளின் தாக்குதலால் 10 மனித இறப்புகளும் பதிவாகியுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


