தலைப்புச் செய்திகள்

நிர்வாணமாக வீடியோக்களில் தோன்றிய ஜோடி, நுகேகொடயில் கைது: கணவன் கணிணி பொறியியல் பட்டதாரி, மனைவி உளவியல் படித்தவர்

தங்கள் நிர்வாண வீடியோக்களை – இங்கிலாந்தில் உள்ள சந்தா அடிப்படையிலான வயதுவந்தோர் இணையத்தளத்தில் பதிவேற்றிய திருமணமான தம்பதியினரை நுகேகொட பிரிவு – குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்தனர்.

கைதான கணவர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் கணிணி பொறியியல் பட்டதாரி என்றும், மனைவி தனியார் நிறுவனத்தில் உளவியலில் டிப்ளோமா பட்டம் பெற்றவர் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் நேற்று (08) ராஜகிரியவில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் வசித்து வந்ததாகவும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் கீழ் தளங்களில் வசித்து வந்தனர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சோதனையின் போது, ​​வீடியோக்கள் மூன்றாவது மாடியில் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், தளபாடங்கள் மற்றும் உட்புற அமைப்புகள் காட்சிகளில் காணப்படும் பின்னணியுடன் பொருந்துவதாகவும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

வீடியோக்களை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ஒரு மொபைல் போன் மற்றும் எடிட்டிங் மற்றும் பதிவேற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மடிக்கணினி ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ள.

தம்பதியினர் அங்கு 334 வீடியோக்களை பதிவேற்றியிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நொவம்பரில் அவர்கள் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அவர்கள் மாதத்திற்கு எட்டு வீடியோக்களை வழங்க வேண்டும். மாதந்தோறும் ரூ.150,000 முதல் ரூ.200,000 வரை சம்பாதித்ததாகவும், பார்வைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிக பணம் சம்பாதித்ததாகவும் தம்பதியினர் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இருவரும் வேலை இழந்து நிதி சிக்கல்களை எதிர்கொண்ட பிறகு, வீடியோக்களை தயாரிப்பதில் ஈடுபட்டதாக அவர்கள் மேலும் கூறியுள்ளனர். இந்த ஆண்டு ஓகஸ்ட் வரை இலங்கைக்குள் அந்த இணையத்தளத்தை பார்வையிட முடியாமல் இருந்ததாகவும், அவர்கள் அடையாளங் காணப்பட மாட்டார்கள் என, அவர் நம்பியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.