தலைப்புச் செய்திகள்

இஸ்ரேலின் குண்டுத்தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்த ஹமாஸ் போராளிகளுக்கு, விடுவிக்கப்பட்ட பெண் ராணுவத்தினர் நன்றி தெரிவிப்பு

இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்த ஹமாஸ் போராளிகளுக்கு, நேற்று (25) ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலின் நான்கு பெண் ராணுவத்தினரும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோகளை சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே, மூன்று பெண் பணயக் கைதிகளை விடுத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், நேற்று தங்களிடமிருந்த இஸ்ரேல் படையைச் சேர்ந்த நான்கு பெண் ராணுவத்தினரை விடுவித்தனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட பெண் ராணுவத்தினர் ஊடகங்களை நோக்கி பேசும் போதே, ஹமாஸ் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.

அவர் பேசும் போது; “எங்களை நன்றாக கவனித்துக் கொண்டமைக்கு, அல் கஸாம் படையினருக்கு (ஹமாஸ் அமைப்பின்ராணுவப் படைப் பிரிவு) நன்றி. நீங்கள் வழங்கிய உணவு, நீர் மற்றும் ஆடைகளுக்கு நன்றி. இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலில் இருந்து எங்களைப் பாதுகாத்த ஆண்களுக்கு எமது நன்றி” எனத் தெரிவித்தனர்.