‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ நூல், நாளை வெளியீடு

🕔 June 5, 2015

Book cover - Suaib casim– அஸ்ரப் ஏ. சமத் –

தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் இணை ஆசிரியர் சுஐப் எம். காசிம் எழுதிய ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் நாளை சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அமைப்பின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், அமைச்சர் ராஜித சேனாரட்ன பிரதம விருந்தினராகவும், விசேட விருந்தினர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகமுமான எம். எம். ஸூஹைர், இலங்கைத் தரக்கட்டளை நிறுவனத்தின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம். எஸ். அனஸ் ஆகியோர் இவ்விழாவில் சிறப்புரையாற்றுவர்.

இவ் விழாவில் – தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர், தினகரன் நாளிதழ் பதில் பிரதம ஆசிரியர் க. குணராசா, வீரகேசரி நாளிதழ் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன், தினக்குரல் வார இதழ் பிரதம ஆசிரியர் பாரதி இராஜநாயகம், ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் யூ. எல். யாகூப், சுடர் ஒளி ஆசிரியர் என். பத்மசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாககப் பங்கேற்கின்றனர்.

புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் – நூலின் முதல் பிரதியை முசலிப் பிரதேச சபைத் தலைவர் தேசமானிய டபிள்யூ. எம். எஹ்யான் பெற்றுக் கொள்கிறார்.

Comments