நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளர் கடமையேற்பு

🕔 November 21, 2022

– முனீரா அபூபக்கர் –

கர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டப்ளியு.எஸ். சத்யானந்தா இன்று (21) அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

நிர்வாகப் பணிகளில் நீண்ட அனுபவம் கொண்ட சத்தியானந்தா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளராக வருவதற்கு முன்னர் கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றினார்.

காலி/ பத்தேகம கிறிஸ்துதேவா ஆண்கள் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் அதே கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ இளங்கலை பட்டம் பெற்ற சத்யானந்தா, அவுஸ்ரேலியாவின் லரோப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்

1998 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட இவர் தவலம, பத்தேகம, ஹிக்கடுவ மற்றும் காலி கடவத் சதர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

முன்னர் தொழிற்பயிற்சி அமைச்சின் உதவிச் செயலாளராகவும், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், அரச நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.

இன்றை கடமையேற்பு நிகழ்வில் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெர்னாண்டோ, தேனுக விதானகமகே, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்