பத்தில் நான்கு குடும்பங்கள் போதியளவு உணவை உண்பதில்லை; நிலைமை இன்னும் மோசமாகும்: இலங்கை தொடர்பில் அறிக்கை

🕔 September 29, 2022

லங்கையில் ஒவ்வொரு பத்தில் நான்கு குடும்பங்கள் போதியளவு உணவு உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் அண்மைய அறிக்கையொன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியானது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும், உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மக்கள் உணவு உண்பதை விட்டு விலகிச் செல்வதாகவும் இந்த திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்காலத்தில் இந்நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகலாம் என உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

இலங்கையர்கள் ஆபத்தான உணவுப்பழக்கத்தில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டும் உலக உணவுத் திட்டம், நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வால், மக்களில் பலர் – குறைவான, மாற்று உணவு வகைகளை உட்கொள்ள முனைகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்